இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மும்பை ஷாப்பிங் பேலஸ் மூலமாக மட்டுமே 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆடம்பர வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்ற முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.
அபுதாயில் முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி.. பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெப்பம்..!
ஆடம்பர சந்தை
இந்தியாவில் ஆடம்பர சந்தை இன்றளவிலும் பெரிய அளவிலான வளர்ச்சி அடையாமல் இருப்பதை உணர்ந்த முகேஷ் அம்பானி இத்துறையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தவும், இப்பிரிவு வர்த்தகத்தை ஆரம்பத்திலேயே கைப்பற்றவும் முடிவு செய்துள்ளார்.
பேஷன் பொருட்கள்
இந்தியாவில் மேற்கத்திய நாடுகளின் பேஷன் பொருட்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பது, அனைவருக்கும் தெரியும், ஆனால் இதில் பெரும்பாலான வர்த்தகம் வெளிநாட்டிலேயே செய்யப்படும் காரணத்தால், இந்தியாவில் ஆடம்பர சந்தைக்கான வாய்ப்புகள் குறைவு.
ஜியோ வோல்டு பிளாசா
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் மும்பையில் துவங்கிய ஜியோ வோல்டு பிளாசாவில் ஆடம்பர பொருட்களுக்கான புதிய வர்த்தகப் பிரிவை உருவாக்க உள்ளது. இந்திய பணக்காரர்களை ஈர்க்கும் வகையில் ஆடம்பர பிராண்டுகளின் பேக் முதல் ஷூ வரையில் அனைத்தையும் இந்த ஜியோ வோல்டு பிளாசாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ்.
900 பில்லியன் டாலர் ரீடைல் சந்தை
இந்தியாவின் 900 பில்லியன் டாலர் ரீடைல் சந்தையில் ஆடம்பர பொருட்களுக்கான வர்த்தகம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. ரீடைல் சந்தையில் அமேசான், வால்மார்ட் போன்றவை கடுமையான போட்டிப்போட்டு வரும் நிலையில் ரிலையன்ஸ் தனது கவனத்தை ஆடம்பர சந்தை மீது திருப்பியுள்ளது.
5 வருடம்
அடுத்த 5 வருடத்தில் இந்தியாவின் ஆடம்பர் சந்தை வர்த்தகம் 5 பில்லியன் டாலர் வரையில் விரிவாக்கம் அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இந்தியா போன்ற நாட்டுக்கு இது மிகவும் சிறியது. இதனாலேயே ரிலையன்ஸ் லூயிஸ் உய்ட்டன் முதல் குஸ்ஸி வரையில் அனைத்து முன்னணி பிராண்டுகளையும் இந்தியாவிற்கு அழைத்து வர முடிவு செய்துள்ளது.
Mukesh ambani targeting Luxury market in india with jio world plaza
Mukesh ambani targeting Luxury market in india with jio world plaza ஆடம்பர சந்தைக்குள் நுழையும் முகேஷ் அம்பானி..!