இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? – பிரதமர் மோடி திடீர் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரானப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும், நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகால், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா நெருக்கடியை
இந்தியா
சிறப்பாக நிர்வகித்தது. எனினும், தற்போது பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மிக அவசியம். நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்டோரில், 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மக்களில் 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்களும் போடப்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை அளிக்கக் கூடிய விஷயம். வெப்ப அலை காரணமாக தீ விபத்துகள் ஏற்படுவதை அடுத்து, பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.