டெக் சந்தையில், ட்விட்டரை
எலான் மஸ்க்
வாங்கியது தான் இப்போது ஹாட் டிரெண்ட். முதலில் 9.2% விழுக்காடு பங்குகளை வாங்கிய மஸ்க், ஏப்ரல் 25 அன்று
ட்விட்டர்
நிறுவனத்தை மொத்தமாக விலை பேசி முடித்தார். இது டெக் நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
பேச்சு சுதந்திரத்தை ட்விட்டர் தடுக்கிறது என்று கடந்த சில மாதங்களாக நிறுவனத்தை வம்பிழுத்து வந்த மஸ்க், திடீரென அந்த நிறுவனத்தையே வாங்கியது தான் டெக் டவுனில் பேசுபொருளாகி உள்ளது. எனினும், எலான் மஸ்க் வசம் சென்ற ட்விட்டரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என பலத் தரப்பட்ட மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், ட்விட்டர் நிறுவனர்களில் ஒருவரான
ஜாக் டோர்சி
வெளியிட்ட ட்வீட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஜாக் டோர்சி ட்வீட்
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி இதுகுறித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், எலான் மஸ்க் எனும் தனிநபரால் மட்டுமே ட்விட்டரை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும் ட்விட்டரை அவர் வசம் ஒப்படைத்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் ட்வீட்
ட்விட்டரை வாங்கிய பிறகு எலான் மஸ்கும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “சமூக வலைத்தளங்களில் மக்கள் தைரியமாக பேசத் தயங்குகின்றனர். அந்த கண்ணோட்டம் இனி மாற்றப்படும். ட்விட்டரில் இனி நீங்கள் விரும்பியதை பேசலாம். ஆனால் உங்கள் விருப்பமானது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
“சில நேரங்களில் மக்கள் தேவைக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதுபோல தான் உண்மை தகவல்களை வெளி கொண்டுவர சட்டங்கள் தடை போட்டால், அதை மாற்றி அமைப்பதற்காக வழிகளை காண்போம். ஆனால், எந்த சூழலிலும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை ட்விட்டர் ஆதரிக்காது. உங்கள் குரலை எப்போதும் நிறுவனம் ஓங்கி ஒலிக்கச் செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.
அனைத்து விதமான செயல்பாடுகளும் நல்ல முறையில் முடிந்திருக்கிறது. இந்த நேரத்தில் ட்விட்டர் கடந்து வந்த பாதை நீங்கள் அறிய ஆவலாக இருப்பதை நாங்கள் அறிவோம். 2006 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய ட்விட்டர், எலான் மஸ்க் கையில் வரும் வரை எப்படி பயணித்தது என பார்க்கலாம்.
பிறந்தது ட்விட்டர்
மார்ச் 2006 சமயத்தில், ஜாக் டோர்சி, பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் ஆகிய மூன்று டெக்கி இளைஞர்களால் தொடங்கப்பட்டது தான் ட்விட்டர். Flickr தளத்தில் இருந்து தோன்றிய யோசனைகளைக் கொண்டு ட்விட்டர் தளம் உருவாக்கப்பட்டது. ஜாக் டோர்சி தான் முதல் ட்வீட்டை பதிவிட்டார். அதில், “Just set up my twttr” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பொது பயன்பாட்டுக்கு வந்த ட்விட்டர்
ஜூலை 15, 2006 அன்று பொது பயன்பாட்டுக்காக ட்விட்டர் மைக்ரோ பிளாகிங் தளமாக வெளியிடப்பட்டது. இது குறித்து நிறுவனர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் ஒரு யூடியூப் வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.
2006 அக்டோபர் மாதத்தில், வில்லியம்ஸ், ஸ்டோன், டோர்சி ஆகிய மூவரும் ட்விட்டரின் பெரும்பாலான பங்குகளை Odeo Investors இடமிருந்து தங்கள் வசப்படுத்தினர். தொடர்ந்து ட்விட்டர் தளத்தின் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மூவரும் பெற்றனர்.
சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்
மார்ச் 2007, ட்விட்டர் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நிறுவனத்திற்கு பெரிய அங்கீகாரத்தை வழங்கியது.
பொறுப்பேற்ற டோர்சி
ஏப்ரல் 2007, ட்விட்டர் தனிப்பெரும் நிறுவனமாக வளர்ந்தது. நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தலைமை செயல் அலுவலர் பதிவியை (CEO) ஏற்றுக்கொண்டார்.
ஹேஷ்டேக் அறிமுகம்
ஆகஸ்ட் 2007இல், ஹேஷ்டேக் அறிமுகமானது. இன்றளவும் ட்விட்டரில் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் இந்த ஹேஷ்டேகை, ட்விட்டர் பயனர் கிரிஸ் மெசினா என்பவர் தான் முதலில் உருவாக்கி உள்ளார்.
வளர்ச்சி கண்ட ட்விட்டர்
ஏப்ரல் 2009இல், ட்விட்டரில் தொடங்கப்பட்ட CNN செய்தி நிறுவனத்தின் பக்கத்தை 10 லட்சம் பேர் ஃபாலோ செய்தனர். இது ட்விட்டர் நிறுவனத்திற்கு பெரிய மைல் கல்லாகப் பார்க்கப்பட்டது.
விளம்ரங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்
ஏப்ரல் 2010இல், ட்வீட்டுகளை விளம்பரப்படும் வசதியை பயனர்களுக்காக நிறுவியது ட்விட்டர். இதன்மூலம், முக்கிய செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க, பணம் செலுத்தப்பட்டு ட்வீட்டுகள் விளம்பரப்படுத்தப்பட்டது. இது நிறுவனத்திற்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் வழியாக அமைந்தது.
5ஆவது ஆண்டு விழா
மார்ச் 2011, ட்விட்டர் தனது 5ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. அப்போது நிறுவனம், ஒவ்வொரு வாரமும் பயனர்களால் ஒரு பில்லியன் அளவுக்கு ட்வீட்டுகள் பதிவிடப்படுவதாக அறிக்கை வெளியிட்டது.
எலான் மஸ்க் தான் ஒரே தீர்வு – ட்விட்டர் நிறுவனர் ஷாக் அறிக்கை!
சிறகை விரித்த ட்விட்டர் பறவை
ஜூன் 2012இல், ட்விட்டர் பறவையின் டீஸை நிறுவனம் வெளியிட்டது. பறவையின் வடிவமைப்பு அனைவரின் கவனத்தையுன் வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து பிராண்டின் குறியீடாகவும் உலகளவில் இது மாறிப் போனது.
வெற்றியை அறிவித்த ஒபாமா
நவம்பர் 2012இல், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா தனது வெற்றியை முதன் முதலில் ட்வீட் மூலம் வெளிப்படுத்தினார். 2012இல் அதிகம் ரீடிவீட் செய்யப்பட்ட பதிவும் இதுதான்!
பொது பங்கு வெளியீடு
நவம்பர் 2012இல், நிறுவனம் பொது பங்கு வெளியீட்டை நடத்தியது. அப்போது ட்விட்டர், சுமார் 31 பில்லியன் டாலர் மதிப்பீடு கொண்ட நிறுவனமாக வளர்ந்திருந்தது.
லைக் பட்டன்
நவம்பர் 2015, தளத்தில் இருந்த Favorites பட்டனை நீக்கியது ட்விட்டர். அதற்கு பதிலாக ட்வீட்டுகளுக்கு லைக் மற்றும் இதயம் வடிவிலான இரண்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டது. ட்வீட்டுகள் குறித்து பயனர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க இது உதவியாக இருந்தது. மேலும், பயனர்களுக்கு தேவையான கண்டண்டுகளை வகைப்படுத்தவும் ட்விட்டருக்கு இந்த அம்சம் உதவியது.
எழுத்துகளின் எண்ணம் அதிகரிப்பு
நவம்பர் 2018இல், 140 வார்த்தகளில் மட்டுமே ட்வீட் பதிவிடும் சூழல் மாற்றப்பட்டு, 280 வார்த்தைகளில் இனிமுதல் ட்வீட் செய்யலாம் என நிறுவனம் அறிவித்தது.
சிஇஓ ஆன இந்தியர்
நவம்பர் 2021இல், 37 வயதே ஆன இந்திய வம்சாவளி பராக் அக்ரவால் ட்விட்டரின் தலைமை செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம் உலகின் டாப் 500 நிறுவனங்களின் இளம் CEO என்ற அங்கீகாரத்தையும் அவர் பெற்றார்.
ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் – எவ்வளவுனு தெரிஞ்சா வாயடச்சு போய்டுவீங்க!
எலான் வசம் ட்விட்டர்
ஏப்ரல் 25, 2022 அன்று ட்விட்டரை சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாங்கினார்.