விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா
விஜய் சேதுபதி
மற்றும்
சமந்தா
உள்ளிட்டோர் நடித்துள்ள படம்
காத்து வாக்குல ரெண்டு காதல்
. ரொமான்ட்டிக் காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில்
நயன்தாரா
கண்மணி என்ற கதாப்பாத்திரத்திலும் சமந்தா கதீஜா என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. காலை 4 மணிக்கே ஸ்பெஷல் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு அமெரிக்காவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது படத்தின் ஃபைனல் பிரின்ட் இன்னும் அமெரிக்க தியேட்டர்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிகிறது. கடைசி நேரத்தில் படக்குழு படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக தெரிகிறது. மாற்றம் செய்யப்பட்ட காப்பி இங்குள்ள திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் முன்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் எந்த அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.