கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசு, அந்நிய செலவாணியை அதிகரிப்பதற்காக, 10 ஆண்டுகள் வரைத் தங்கி பணியாற்ற அனுமதிக்கும் கோல்டன் பாரடைஸ் விசாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
சுற்றுலாத்துறை வருவாயை பெரிதும் சார்ந்துள்ள இலங்கை பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அந்நிய செலவாணி குறைந்ததால் பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்யமுடியாமல், கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது.
அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிப்பதற்காக, இலங்கை வங்கியில் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் டெபாசிட் வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு அங்கு 10 ஆண்டுகள் தங்கி பணியாற்ற அனுமதிக்கும் கோல்டன் பாரடைஸ் விசா வழங்கப்பட உள்ளது.
குறைந்தபட்சம் 75,000 டாலருக்கு அப்பார்ட்மெண்ட் வாங்கும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டு விசா வழங்கப்பட உள்ளது.