இலங்கையில் நேற்று (25) 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) 898 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும் மற்றும் 665 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் மேற்கொண்டதில் 29 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி ஜனவரி 1 முதல் இதுவரையில் மொத்தமாக 75 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புத்தாண்டு கொத்தணியில் இருந்து 4 இலட்சத்து 83 ஆயிரத்து 90 பேருக்கும், பேலியகொட கொத்தணியில் இருந்து 82 ஆயிரத்து 785 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியில் இருந்து 9 ஆயிரத்து 154 பேருக்கும் மற்றும் திவுலப்பிட்டிய கொத்தணியில் இருந்து 3 ஆயிரத்து 59 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.
மேலும் தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது, கொழும்பில் இருந்து ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 887 தொற்றாளர்களும், கம்பஹாவில் இருந்து 95 ஆயிரத்து 857 தொற்றாளர்களும், களுத்துறையில் இருந்து 51 ஆயிரத்து 181 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன் மாவட்ட ரீதியாக கொழும்பில் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 184 பேரும், கம்பஹாவில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 391 பேரும், களுத்துறையில் 58 ஆயிரத்து 239 பேரும், காலியில் 45 ஆயிரத்து 624 பேரும், குருநாகலைச் சேர்ந்த 31 ஆயிரத்து 496 பேரும் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, 3 ஆயிரத்து 530 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்று உள்ளதுடன் , இன்னும் 197 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் குணமடைந்தவர்களில் முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சிறைச்சாலைகளையைச் சேர்ந்தவர்கள் மற்றும் மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 24 க்கு இடையில் வீட்டில் தனிமைபடுத்தலில் உள்ளவர்கள் அடங்குவர்.
மேலும் நேற்W முன்தினம் தினம் மூன்று பேர் சிகிச்சை நிலையங்களில் குணமடைந்து உள்ளதாகவும் , அதன் மூலம் நாட்டின் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 46 ஆயிரத்து 109 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
K.Sayanthiny