எழும்பூரில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில், பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்ததாவது,
“2003-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த வாஜ்பாய் அரசு, சிறுபான்மையினருக்கு எதிராக குடியுரிமை சட்ட திட்டத்தை உருவாக்கிய போது, தி.மு.க அரசு பி.ஜே.பி அரசுடன் கூட்டணி வைத்து குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்தது.
ஆனால், தற்போது சட்டமன்றத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போல தி.மு.க நாடகம் ஆடுகிறது. இது சிறுபான்மையினருக்கு செய்த துரோகமாகும்”. என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், ரங்கசாமி, எஸ்.டி.பி.ஐ மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலாளர் துருக்கி எம். ஏ. சி. ரபிக் ராஜா, ஏ. முஜிபுர் ரகுமான், மாநில அம்மா பேரவை துணைத் தலைவர் ஸ்டார் ரபிக், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.எம்.எம். சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் கே. சித்திக் முகம்மது, பகுதி கழக செயலாளர் ஈ.பி பாண்டியன், மாஸ்டர் இரா.ராஜா, டி. வி. நாசர், தலைவா ஸ்ரீதர், மன்னடி எஸ்.எம். ரபிக் மற்றும் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.