உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது, Zaporizhzhia பிராந்தியத்தில் உள்ள கிடங்கை எங்கள் Kalibr ஏவுகணைகள் தாக்கி அழித்தது.
உக்ரேனிய துருப்புகளுக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க வழங்கிய பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் Zaporizhzhia பிராந்தியத்தில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுக்கின்றன என ரஷ்ய குற்றம்சாட்டியிருந்தது.
220 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ரஷ்ய எண்ணெய்யை பிரித்தானியா இறக்குமதி செய்தது அம்பலம்!
அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனுக்கு தங்கள் சொந்த படைகளை அனுப்புவதை நிராகரித்துள்ளன.
ஆனால் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் டிரோன்கள் மற்றும் விமான எதிர்ப்பு மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பெரிய அளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.