டெல்லி: உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடியை விடுவிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் ரூ.4,526 கோடியில் 540 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நக்சல் பாதிப்புள்ள இடங்களில் 2ஜி சேவையில் இருந்து 4ஜி சேவை வழங்க ரூ.1,884 கோடியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.