என்.ஜி.ஓ., உரிமம் ரத்து : மத்திய அரசு அதிரடி

புதுடில்லி : வெளிநாட்டு நன்கொடை பெற்ற விவகாரத்தில் விதிமுறைகளை மீறிய இரண்டு என்.ஜி.ஓ.,க்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
வெளிநாடுளில் இருந்து நன்கொடை பெற்று செயல்படும் என்.ஜி.ஓ., எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.விதிமுறைகளை மீறும், முறைகேடுகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து வருகிறது.கடந்த 2017 – 21 காலகட்டத்தில் விதிமுறைகளை மீறியதற்காக, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,900 என்.ஜி.ஓ.,க்களின் உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

இந்நிலையில், காமன்வெல்த் நாடுகளில் மனித உரிமை சார்ந்த விவகாரங்களில் செயல்பட்டு வந்த சி.எச்.ஆர்.ஐ., மற்றும் பாலியல் தொழிலாளர்களின் நலன் சார்ந்து பணியாற்றி வந்த ஏ.ஏ.டபிள்யூ.டபிள்யூ., என்ற இரண்டு என்.ஜி.ஓ.,க்கள் விதிமுறைகளை மீறியதற்காக அதன் உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ரத்து செய்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.