புதுச்சேரியில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகளில் எம்.ஏர்.பி விலையை விட பாட்டிலுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு கடை ஊழியிர்கள் விற்றாலும் அதன் முழு பொறுப்பும் கடை உரிமையாளரையே சேரும் என தெரிவித்துள்ள புதுச்சேரி கலால் துறை, விதிமீறலில் ஈடுபடும் மதுக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.