இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் மூன்றரை விழுக்காடு பங்குகளை விற்று 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் திரட்டுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மே 4 முதல் மே 9 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தீபம் துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.
ஒரு பங்கின் விலை 902 ரூபாய் முதல் 949 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
22 கோடியே 13 இலட்சம் பங்குகளை விற்பதன் மூலம் 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாகவும், இது பொதுமக்களுக்கான மிகப்பெரிய பங்கு விற்பனை என்றும் தெரிவித்தார்.
இதில் 15 இலட்சத்து 80 ஆயிரம் பங்குகள் எல்ஐசி ஊழியர்களுக்கும், 2 கோடியே 21 இலட்சம் பங்குகள் பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பங்கின் விலையிலும் பாலிசிதாரர்களுக்கு அறுபது ரூபாயும், எல்ஐசி ஊழியர்களுக்கு 40 ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படும்.