இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு வெளியீடாக எல் ஐ சி இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. ஆனால் சர்வதேச ஆளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சந்தையானது கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றது. கூடுதலாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது இப்போதைக்கு முடிவுக்கு வருமா என்பதும் பெரும் கேள்விக் குறியாகவோ இருந்து வருகிறது.
ஆக இப்படி பல இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில், வரவிருக்கும் மத்திய ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. அதிர்ந்து போன ஐரோப்பிய நாடுகள்.. இனி எரிபொருள் விலை என்னவாகும்?
முதலீட்டு மதிப்பு குறைப்பு
ஆக இதுவும் இந்திய சந்தையில் இருந்து பலத்த முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். மொத்தத்தில் இந்த நிலையில் இந்திய சந்தையானது தற்போதைக்கு ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்றே பலரும் கணித்து வருகின்றனர். இத்தகைய சூழலுக்கு மத்தியில் தான் எல்ஐசி பங்கு வெளியீட்டு மதிப்பினை மத்திய அரசு கிட்டதட்ட 21,000 கோடி ரூபாயாக குறைத்துள்ளது.
FPO – இருக்கே
இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் பலருக்கும் இருக்கும் ஒரு கேள்வி. ஐபிஓ (IPO)-வில் பெரியளவில் திரட்ட முடியாவிட்டால் என்ன? அடுத்ததாக FPO-வில் பெரியளவில் நிதி திரட்டிக் கொள்ளலாமே என்ற எண்ணம் எழுந்திருக்கும். ஆனால் இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தீபம்-மின் (DIPAM) செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
அடுத்த ஓராண்டுக்கு FPO இல்லை
மே மாத தொடக்கத்தில் பங்கு வெளியீடு செய்யப்படவுள்ள நிலையில், இவ்வெளியீட்டினை தொடர்ந்து 1 வருடத்திற்கு உரிமை பங்கு வெளியீடு (FPO) இருக்காது என்று கூறியுள்ளார். ஆக அடுத்த ஒரு வருடத்திற்கு மீண்டும் ஒரு பங்கு விற்பனை இருக்காது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
சில்லறை முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
எப்படியிருப்பினும் எல்ஐசி ஐபிஓ என்பது சில்லறை முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தள்ளுபடி விலையுடன் கிடைக்கும் என்பதால், மற்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் விலையை விட குறைவாகவே இருக்கும்.
DIPAM secretary said NO LIC FPO in next 1 year
DIPAM secretary said NO LIC FPO in next 1 year /எல்ஐசி ஐபிஓ-வை தொடர்ந்து ஓராண்டுக்கு FPO இல்லை.. துஹின் காந்தா பாண்டே தகவல்!