ஐரோப்பிய நாடான மால்டோவா மீது ரஷ்ய தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக உக்ரேனிய துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மால்டோவாவிலிருந்து பிரிந்த பகுதியான Transnistria-வில் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
Transnistria மீதான தாக்குதல்கள் உக்ரைன் மீது பழிபோட ரஷ்ய நடத்தும் பொய்யான தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேசமயம், Transnistria நிகழ்ந்து வரும் சம்பவங்களை கூர்ந்து கண்காணித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிடு! கோலிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை
இந்நிலையில், மால்டோவாவிலிருந்து பிரிந்த பகுதியான Transnistria-வை பயன்படுத்தி உக்ரைன் அல்லது மால்டோவா மீது ரஷ்ய தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரேனிய துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Transnistria-வில் ரஷ்ய தலையிட வேண்டிய ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க விரும்புவதாக இந்த வார தொடக்கத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முன்னதாகவும் இதே போன்ற கருத்துகளை தான் ரஷ்ய தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.