பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீனர்கள் மூவர்கள் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுவெடிப்புக்கு பலூச் விடுதலை ராணுவம் என்னும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கராச்சி பல்கலைக்கழகத்தில் சீன மொழி பயிற்றுவிக்கும் பிரிவில் உடலில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்த ஒரு பெண் சீனர்கள் வந்த வேன் மீது வந்து மோதிக் குண்டுகளை வெடிக்கச் செய்தாள்.
இதில் அந்தப் பெண்ணும், சீனர்கள் மூவரும் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தாங்களே நடத்தியதாகப் பலூச் விடுதலை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜீயாந்த் பலோச் டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.