சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், அறுபது ஆண்டு தேர்தல் களத்தில் வீழ்த்த முடியாத அரசியல் அதிசயம் என கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ‘அறுபது ஆண்டுதேர்தல் களத்தில் வீழ்த்த முடியாத அரசியல் அதிசயம்! மாநிலங்கள் கிளைகளல்ல, வேர்கள் என்று முழங்கிய போர் முரசம்! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என்ற வள்ளுவத்தினை அரசியல் முழக்கமாக முன்வைத்த சமூகநீதி காவலர்! பிறந்த நாள் அரசு விழா! முதல்வருக்கு நன்றி!’ என பதிவிட்டுள்ளார்.