உடுப்பி:உடுப்பி மாவட்டம், பிரம்மாவை சேர்ந்த இரண்டு சிறார்கள் கழிவறையில் பயன்படுத்தப்படும் ‘ஸ்மார்ட் பிளஷ் ரெட்ரோ பிட்’டுக்காக, இந்திய அரசு காப்புரிமை பெற்றுள்ளனர்.
உடுப்பி, பிரம்மாவர் ஆயுர்வேத துறை பேராசிரியர் டாக்டராக இருப்பவர், ஸ்ரீபதி அடிகா, ௪௨; இவரது மனைவி, டாக்டர் ரம்யா அடிகா, ௩௮. இவர்களின் மகன்கள் சித்தார்த் அடிகா, 11, பிரத்யும்னா அடிகா, 8, ஆகியோர், மாதவா கிருபா பள்ளியில் முறையே ஆறாம் வகுப்பும், மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இளம் வயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர்.
இதற்காக தீவிரமாக ஆலோசித்தனர். கழிவறையில் தண்ணீர் பயன்படுத்தும் முறையில், மாற்றம் செய்ய முடிவு செய்தனர்.அதன்படி, சிறுநீருக்கும், மலம் செல்வதற்கும் தனித்தனியாக தண்ணீர் பயன்படுத்தும் வகையில், ‘ஸ்மார்ட் பிளஷ் ரெட்ரோ பிட்’ என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
தங்களின் புதிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கக் கோரி, பெங்களூரிலுள்ள ஓ.எம்.எஸ்., காப்புரிமை சேவை இயக்குனர் ஓம் பிரகாஷ் சிருங்கேரியை அணுகினர். அவர், மத்திய அரசுக்கு தெரியப்படுத்தினார்.இவ்விரு சிறார்களின் கண்டுபிடிப்புக்கு, இந்திய அரசு காப்புரிமை வழங்கி அறிவித்துள்ளது.
Advertisement