சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் அங்கு மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட ஊடகத்துறையினருக்கு தமிழக முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு, நேரத்தின் அருமை உணர்ந்து பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள். காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில்,
மனிதத்தால் உந்தப்பட்டு – நேரத்தின் அருமை உணர்ந்து – பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்!
காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்! pic.twitter.com/jzMftjjSO3
— M.K.Stalin (@mkstalin) April 27, 2022
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இதில் 2-வது டவரின் பின்புறம் உள்ள சர்ஜிக்கல் உபகரணங்கள் வைக்கும் அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.