ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கை கட்டுக்கடங்காமல் நடுங்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு தீவிரமான நிலையில் இருப்பதாகவும், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. அவருக்கு சுயமாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கை கால்கள் நடுக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற வதந்திகளுக்கு மத்தியில், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடனான ஒரு சந்திப்பில் புடின் கட்டுப்பாடில்லாமல் நடுங்கும் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Das sieht definitiv nicht gesund aus, wie sich #Putin da bewegt. #fckPutin #freeUkraina pic.twitter.com/2WxKCsQ8Su
— Team Stollberg 🇺🇦🇪🇺🏳️🌈 (@Team_Stollberg) March 1, 2022
அந்த காட்சிகளில், புடின் தனது கையை அவரது மார்பில் அழுத்தமாக அசைப்பதைத் தடுக்கும் முயற்சியைக் காட்டுகிறது. இந்த காட்சிகளை முதலில் ஆன்லைனில் வெளியிட்ட Visegrad24, “அநேகமாக புடினின் உடல்நிலையில் ஏதோ தவறு இருப்பதாக தெளிவான வீடியோ” என்று கூறியது.
இதனிடையே, புனின் கால்கள் தொடர்ந்து அசைந்துகொண்ட இருக்கும் மற்றோரு வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
dictators can be brutal
they can be capricious
but they can’t be weakserious problem for putin pic.twitter.com/OGFejK09i9
— ian bremmer (@ianbremmer) April 22, 2022