திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது.
பிரையண்ட் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் செடிகள் நடவு செய்யப்பட்டன.
இந்நிலையில், அபூர்வ வகையான ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ, சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்க துவங்கியுள்ளது.
இந்த பூக்கள் பூத்து மூன்று நாட்கள் வரை செடியிலும் வாடாமல் இருக்கும் எனவும் அதன் பின் அதுவாகவே உதிர்ந்து விடும் என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.