எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாக அதிகரிக்கலாம் என தேசிய கால்நடை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு தற்போது 25 முதல் 31 ரூபாவாக இருப்பதே இதற்குக் காரணம் என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் மகமகே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கோழி இறைச்சியின் விலையும் பாரிய அளவில் அதிரிக்கக் கூடும் எதிர்பார்க்கப்படுகின்றது.