கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே வயல்வெளியை ஒட்டிய சாலையோரத்தில், ஒரு பெண்ணை காட்டு யானை ஒன்று தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாகர்ஹோலே வனப்பகுதியை ஒட்டியுள்ள கடாஞ்சி கிராமத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்துள்ள நிலையில், நேற்று மாலை காட்டு யானை திடீரென சாலையில் நடந்து வந்தது.
அப்போது வயல்வெளியில் வேலை செய்துக்கொண்டிருந்த கூலி தொழிலாளி பெண் ஒருவர் யானையை பார்த்து பயந்து ஓடிய நிலையில், அப்பெண்ணை துரத்தி சென்ற யானை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் காட்டு பகுதிக்கு விரட்டியடித்தனர்.