டெல்லி: சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவில்லை என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பிரதமர் திசைத்திருப்புவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மோடி ஆட்சியில் வசூலிக்கும் கலால் வரியை ஒப்பிட்டு விமர்சனம் செய்தார்.