சுவீடன் நாட்டின் ஹாலந்து மாகாணத்தில் தொழுவத்தில் இருந்து மேய்ச்சலுக்குத் திறந்து விட்ட பசுக்கள் துள்ளிக் குதித்தும், பாய்ந்தோடியும் சென்றதைப் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
குளிர்காலத்தில் தொழுவத்தில் அடைக்கப்பட்ட பசுக்களைக் குளிர்காலம் முடிந்தபின் மேய்ச்சலுக்குப் புல்வெளிக்குத் திறந்துவிடும் நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.
சுவீடன் பால்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
நெடுநாட்களுக்குப் பின் வெளியே வந்த பசுக்கள் துள்ளிக் குதித்தும் பாய்ந்தோடியும் மகிழ்ந்தன.