கடலூர் மாவட்டத்தில், சொத்து தகராறில் உறவினர்கள் இருவரை கொலை செய்த தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அண்ணன், தம்பியான கணேசன் மற்றும் விஜயனுக்கு பூர்விக சொத்தை பிரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேச, கணேசன், தனது மகன் மற்றும் உறவினர் ஒருவருடன் விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, விஜயனும், அவரது மகன் கோபிநாத்தும் கத்தியால் தாக்கியதில், கணேசனின் மகனும், அவரது உறவினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.