சவுதி அரேபியாவின்
ஜெட்டா
நகரில் பிரபல ஹோட்டல் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இங்கு அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் அண்மையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சமோசா உள்ளிட்ட பலகார வகைகள், மதிய உணவு உள்ளிட்டவை கழிவறையிலேயே வைத்து தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. அத்துடன் காலாவதியான இறைச்சி, பாலாடை கட்டி உள்ளிட்ட பொருட்களும் அங்கு பயன்படுத்தப்பட்டு வருவதையும் அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, சுகாதாரமற்ற முறையில் எலிகளும், பூச்சிகளும் நடமாடிக் கொண்டிருந்த ஹோட்டலை அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
என்னது செக்ஸ் படங்களை ஆய்வு செய்றதுக்குன்னு ஒரு படிப்பா?
கடந்த ஜனவரி மாதம் ஜெட்டா நகரின் மற்றொரு பிரபல ஹோட்டலில் அலைந்து கொண்டிருந்த எலி, இறைச்சியை சாப்பிட்டு கொண்டும் இருந்துள்ளது. அதிர்ச்சி அளிக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து அந்த
ஹோட்டலுக்கு சீல்
வைத்த அதிகாரிகள், நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் தொடர்ந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 2,800 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 43 ஹோட்டல்களில் 26 உணவகங்களுக்கு இதுவரை சீல் வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.