தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து 1900 டாலர்களுக்கு கீழாக குறைந்துள்ளது. இது இன்னும் சரிவினைக் காணலாமோ என்ற உணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பலமான ஏற்ற இறக்கத்தில் காணப்படும் தங்கம் விலையானது இனி எப்படியிருக்கும்?
தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? அடுத்த முக்கிய லெவல்கள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மோடியின் கனவுத் திட்டம் விளாடிமிர் புதினின் போரால் தோல்வி..?!
சரிவில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், கடந்த அமர்வில் சற்று அதிகரித்தது. இது இனி ஏற்றம் காண வழிவகுக்கலாமோ? ஏனெனில் தங்கம் விலையானது 1 மாத சரிவில் காணப்படும் நிலையில், குறைந்த விலையில் பலரும் வாங்க நினைக்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
வலுவான டாலர் மதிப்பு
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவான ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையானது ஏற்றம் காணுவதை தடுத்துள்ளது. எனினும் மறுபுறம் ஏற்றம் கண்டு வந்த பத்திர சந்தையானது மீண்டும், சரிவினைக் கண்டுள்ளது. ஆக இது தங்கம் விலையில் ஏற்படும் அதிக சரிவினைக் தடுக்கலாம்.
உச்சம் தொடும் பணவீக்கம்
உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கமும் கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா மத்தியில் அதுவும் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
தேவை அதிகரிக்கலாம்
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனினும் சீனா மற்றும் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. பரவி வரும் கொரோனா மத்தியில் பிசிகல் தங்கத்தின் தேவையானது குறையலாம் என்றாலும், முதலீட்டு ரீதியாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். குறிப்பாக இந்தியாவில் வரவிருக்கும் திருமண பருவம், அக்ஷ்ய திருதியை உள்ளிட்ட பலவும் தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகள் நிலவரம்
சர்வதேச பங்கு சந்தைகள் இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சரிவிலேயே காணப்படுகின்றன. இது டாலர் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இதற்கிடையில் தங்கத்தின் விலையானது அதிக ஏற்ற இறக்கம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டாலரின் மதிப்பானது 102 டாலர்களை தாண்டியுள்ள நிலையில், இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
குறிப்பாக தங்கம் விலையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1884 டாலர்களாகும். இதே இந்திய சந்தையில் தங்கம் விலையானது 51,440 – 51,280 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 51,720 – 51,880 ரூபாயாகவும் பிரித்வி பின்மார்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
டெக்னிக்கல் எப்படியுள்ளது?
டெனிக்கலாக தங்கம் விலையானது இண்டிராடே வணிகத்தில் சற்று ஏற்ற இறக்கம் அதிகம் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று குறைந்த பின்னர் வாங்கலாம். சர்வதேச சந்தை இந்திய சந்தை என இரண்டிலுமே தங்கம் விலையானது தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 3.70 டாலர்கள் குறைந்தே, 1900.30 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.இது தற்போது அவுன்ஸூக்கு 0.34% அதிகரித்து, 23.620 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 66 ரூபாய் குறைந்து, 51,518 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படலாம். நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 47 ரூபாய் அதிகரித்து, 65,015 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது.எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. வெள்ளி விலையானது இந்திய சந்தையில் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையில் இதுவரையில் மாற்றம் காணவில்லை. தற்போது சென்னையில் கிராமுக்கு 4881 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 5325 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 42,600 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 53,250 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 70 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 700 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
சர்வதேச தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இது சீனாவின் கொரோனா தாக்கம், தேவை, பணவீக்கம்,டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். இதே ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on April 27th, 2022: gold prices today fall amid high volatility; is it a right time buy?
gold price on April 27th, 2022: gold prices today fall amid high volatility; is it a right time buy? / தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?