தஞ்சை களிமேடு தேர் விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை தேர் விபத்து
சம்பவம் தொடர்பான செய்தியறிந்து வேதனையுற்றதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமுற்றோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதப் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கிடவும்
முதல்வர் ஸ்டாலின்
ஆணையிட்டுள்ளார்.

இந்த நிலையில், தேர் விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,
பிரதமர் மோடி
ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.