தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வருடம் தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் 94 ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.
அப்போது பூதலூர் சாலையில் களிமேடு என்ற பகுதியில் தேர்பவனி வந்து கொண்டிருந்த போது தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதற்கு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அவர்கள் உலகை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
களிமேடு தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தைத் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) April 27, 2022
இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தைத் தருகிறது. இதுபோன்ற கூடுகைகளில் விழா ஏர்பாட்டாளர்களுடன் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியோர் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.