தஞ்சை: தஞ்சை களிமேடு தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தது துயரத்தை தந்திருக்கிறது; அதை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தேர் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர் விபத்து குறித்து அறிந்ததும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரை அனுப்பி வைத்தேன். கோவில் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் என கூறினார்.