திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு தனியாக வரும் நபர்களை குறிவைத்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் ஆயக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, காளிதாஸ் என்ற அந்த இருவரும் போதையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
பிடிபட்டவர்களிடமிருந்து சிறிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.