மகேஷ்பாபு
நடிப்பில் உருவாகி வரும் ‘
சர்க்காரு வாரி பாட்டா
‘ திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.நடிகர் மகேஷ் பாபு தற்போது ‘கீதா கோவிந்தம்’ படத்தின் இயக்குனர்
பரசுராம்
இயக்கத்தில் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு
தமன்
இசையமைக்கிறார். இந்தப் படத்தை மகேஷ் பாபு தயாரித்து வருகிறார்.வரும் மே 12 ஆம் தேதி ‘சர்காரு வாரி பாட்டா’ தியேட்டர்களில் வெளியாகிறது. மகேஷ் பாபு தனது சர்க்காரு வாரி பாட்டா படத்தை தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் முதன்முதலில் வாங்கிய சம்பளம்… எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல்..!
தற்போது அனைத்து நடிகர்களும் தங்கள் படங்களை மற்ற மொழிகளிலும் வெளியிட்டு அதன் மூலம் தங்கள் மார்க்கெட்டை உயர்த்தி வருகின்றனர். ஆர்ஆர்ஆர், புஷ்பா,
கேஜிஎப்
உள்ளிட்ட படங்கள் பான் இந்தியா அளவில் வெற்றி பெற்று அந்த நடிகர்களின் மார்க்கெட்டை இந்திய அளவில் உயர்த்தியுள்ளன.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இந்நிலையில் மகேஷ் பாபு தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த சர்க்காரு வாரி பாட்டா படத்தைதமிழிலும் வெளியிடுகிறாராம். இதற்கு முன்னர்
ஏஆர் முருகதாஸ்
இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் திரைப்படம் தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!