திடீரென்று மாயமான பிரித்தானிய தாயார்: 6 நாட்களுக்கு பின்னர் தெரியவந்த நொறுங்கவைக்கும் தகவல்


பிரித்தானியாவில் சொந்த வாகனத்தில் பயணித்த தாயார் ஒருவர் மாயமான நிலையில், 6 நாட்களுக்கு பிறகு அவர் கொல்லப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகி, அவரது குடும்பத்தினரை நொறுங்க வைத்துள்ளது.

ஏப்ரல் 22ம் திகதி பகல், உள்ளூர் நேரப்படி 9.30 மணியளவில் 33 வயதான Katie Kenyon தமது Ford Transit வாகனத்தில் பயணப்பட்டுள்ளார்.
ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

தற்போது சம்பவம் நடந்து 6 நாட்களுக்கு பிறகு அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் உறுதி செய்துள்ளதுடன், இந்த விவகாரம் தொடர்பில் 50 வயதான Andrew Burfield என்பவரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தாயாருக்கு நன்கு அறிமுகமானவர் Andrew Burfield என பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், காணாமல் போனதாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக லங்காஷயர் காவல்துறை நேற்று தெரிவித்திருந்தது.

மட்டுமின்றி, Katie Kenyon சடலமானது இதுவரை சிக்கவில்லை எனவும், தேடுதல் நடவடிக்கையானது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டதாகவே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், Katie Kenyon தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.