Theni Revenue department recruitment 2022 apply soon: வருவாய்த்துறையில் வேலைபார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு, அதுவும் குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும். மேலும் உங்கள் சொந்த ஊருக்கு அருகிலே வேலை கிடைக்க வாய்ப்பு. இந்த அருமையான வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.
தேனி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : 01.07.2021 அன்று, 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ 11,100 – 35,100
வயதுத் தகுதி : 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின் படி, SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதையும் படியுங்கள்: பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு; 696 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.