கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் நகர அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரான பறக்கை பகுதியைச் சேர்ந்த நித்திய லட்சுமணன், சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பள்ளிக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரித்ததில், அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து அதிகாரிகள் போலீசில் புகாரளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமையாசிரியர் நித்திய லட்சுமணனை கைது செய்தனர்.
ஏற்கனவே இருளப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த போது அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து, இதே நபர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.