புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி தர வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித் துறை குறிப்பாணை அனுப்பியுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை இன்று (புதன்கிழமை) குறிப்பாணை ஒன்றை அனுப்பியது. அதில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும். வரும் மே 15-ம் தேதிக்குள் தேர்ச்சி பட்டியலை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
பள்ளிக்கு குறைவான வருகை பதிவேடு, பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை போன்ற காரணங்களைக் காட்டி மாணவர்களை வெளியேற்றக் கூடாது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் 30-ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகளுக்கு தற்போது பள்ளி இறுதித் தேர்வுகள் நடந்து வரும் சூழலில் அனைவரும் தேர்ச்சி என்று உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.