தஞ்சாவூர்
அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பல்வேறு தெருக்களின் வழியாக வீதி உலா நடத்தப்பட்டு அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலைக்கு திருத்தேர் வந்தது.
‘அடிபாவி அதுக்கா 6 கோடி’… நயன்தாராவை விளாசி தள்ளிய பிரபல தயாரிப்பாளர்!
அப்போது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர்
வைரமுத்து
மின்சார விபத்து குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
எல்லாம் நேரம்… நம்பர் நடிகையின் நிலைமையை பார்த்து ச்சு கொட்டும் கோடம்பாக்கம்!
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
“களிமேட்டுத் தேர்த் திருவிழாவில்
தஞ்சைத் தமிழர்களைத்
தாக்கிய மின்சாரம்
நெஞ்சைத் தாக்குகிறது
இறந்தார் குடும்பத்துக்கு
என் ஆழ்ந்த இரங்கல்..
அய்யகோ மரணமே!
உனக்குப்
பார்வையுமில்லை;
பக்தியுமில்லை”
இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களும் விபத்தில் மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.