நம் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக, ஓய்வுபெறும் ராணுவ தலைமை தளபதி நரவானே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில், தமிழகத்தின் குன்னுாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். அப்போது, முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவராக, ராணுவ தலைமை தளபதி, மனோஜ் முகுந்த் நரவானே பொறுப்பேற்றார்.
அவரின் பதவிக்காலம், நாளை மறுநாளுடன் முடிவுக்கு வர உள்ளது.இதையடுத்து, புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டேவை, சமீபத்தில் மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில், ஓய்வுபெறும் நரவானேவை, அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பிரதமர் அலுவலகம் விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
– புதுடில்லி நிருபர் –
நம் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக, ஓய்வுபெறும் ராணுவ தலைமை தளபதி நரவானே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.nsimg3017679nsimg கடந்த ஆண்டு டிசம்பரில், தமிழகத்தின் குன்னுாரில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.