பெங்களூரு:பி.எம்.ஆர்.சி.எல்., எனப்படும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்திய தின பாஸ், மூன்று நாட்கள் பாஸ்களுக்கு, பயணியரிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. கட்டணம் அதிகம் என கருதுகின்றனர்.
பயணியரின் வேண்டுகோளுக்கு பணிந்த பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஏப்ரல் 2ல், தின பாஸ், மூன்று நாட்கள் பாஸ்களை அறிமுகம் செய்தது.தின பாசுக்கு 200 ரூபாய்; மூன்று நாட்கள் பாசுக்கு 400 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சாதாரண மக்களின் கைக்கெட்டும்படி இல்லை.
பணக்காரர்களை கவனத்தில் வைத்துக்கொண்டு, கட்டணம் நிர்ணயித்துள்ளதாக பலரும் கருதுகின்றனர்.அரசு பி.எம்.டி.சி., பஸ்களில், நாள் முழுவதும் பெங்களூரின் எந்த மூலைக்கு பயணிக்கவும், 70 – 147 ரூபாய் செலவாகும்.இதனுடன் ஒப்பிட்டால், மெட்ரோ ரயில்களின் தின பாஸ், மூன்று நாட்கள் பாஸ்களின் கட்டணம் அதிகம்.
எனவே தின பாஸ், மூன்று நாட்கள் பாஸ் வாங்க, பயணியர் முன்வரவில்லை. தின பாஸ் கட்டணத்தை, 140 – 150 ரூபாய் வரை குறைத்தால், பயணியருக்கு வசதியாக இருக்குமென்ற கருத்து எழுந்துள்ளது.
Advertisement