ரஷ்யா அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனம் காஸ்ப்ரோம் போலந்து, பல்கேரியாவுக்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாக கூறியதை அடுத்து, மாஸ்கோ பிளாக்மெயில் செய்வதாக இவ்விரு நாடுகளும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பிளவுகளை வளர்க்க ரஷ்யா முயல்வதாகவும், போலந்தின் வெளியுறவு துறை அமைச்சர் மார்சின் பிரசிடாக்ஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது ரஷ்யா மிகப்பெரிய சப்ளையர் என்பதை காட்டுகிறது.
ஏர் ஏசியா-வை வாங்கும் ஏர் இந்தியா.. டாடா-வின் மாஸ்டர் பிளான்..!
போலந்து பல்கேரியாவுக்கு சப்ளை நிறுத்தம்
காஸ்ப்ரோம் எரிவாயுக்கான கட்டணத்தை பல்கேரியாவும், போலந்தும் ரூபிளில் செலுத்த மறுத்ததை தொடர்ந்து, ரஷ்யா இத்தகைய அறிவிப்பினை கொடுத்துள்ளது.
ரஷ்யாவின் காஸ்ப்ரோம் நிறுவனம் , போலந்து பல்கேரியா நாடுகளுக்கு எரிவாயு பைப்லைன் மூலம் வழங்குவதை புதன் கிழமையிலிருந்து நிறுத்தப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பினை அடுத்து தான் இன்று முதல் சப்ளையை நிறுத்தியுள்ளது.
போலந்து பிரதமரின் கருத்து
இதற்கிடையில் போலந்தின் சேமிப்பு கிடங்குகளில் மொத்தம் 76 சதவீதம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைக்கு தேவையான எரிவாயு இருப்பதாகவும், எரிபொருள் முடிவடைவதற்குள், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியும் என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் கருத்து
எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என ரஷ்யா கூறியது. ஆனால் ரூபிளில் செலுத்த முடியாததால் ரஷ்யா நிறுத்தத்தினை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து யூரோ அல்லது டாலரில் தான் செலுத்த முடியும் என்று கூறின.
ஐரோப்பிய நாடுகளுக்கு பிரச்சனையே
பல்கேரியா இது குறித்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகளில் ரூபிளில் செலுத்த மறுத்து வருகின்றன. ஆனால் தற்போதைக்கு இது ஐரோப்பிய நாடுகளுக்கே பிரச்சனையாக திரும்பியுள்ளது. இது காஸ்ப்ரோம்-க்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலந்து ஜனாதிபதி Andrzej Duda தெரிவித்துள்ளார்.
Russia’s Gazprom halts gas supply to poland and bulgaria
Russia’s Gazprom halts gas supply to poland and bulgaria/ரஷ்யாவின் அதிரடி முடிவு.. அதிர்ந்து போன ஐரோப்பிய நாடுகள்.. இனி எரிபொருள் விலை என்னவாகும்?