ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ: நோயாளிகளை பாதுகாக்க உதவிய ஊடகவியலாளர்கள்

Tamilnadu News Update : சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் :மீட்பு பணியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களுக்கு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று  (27-04-2022.) புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பிரிவு அருகில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயனைப்பு துறையினர் 2 மனி நேரத்திற்கு மேலாக  போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்கும் பணியில்  பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் ஈடுபட்டிருந்தனர் அப்போது .தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை பரவி அருகில் இருந்த நரம்பியல் துறையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அந்த நோயாளிகளை  தீயணைப்புத் துறையினரும் நோயாளிகளின் உறவினர்களும் பத்திரமாக  மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Photographer ashwin, the new Indian Express

அப்போது தீ விபத்து சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படங்கள்  மூலம் பதிவு செய்து கொண்டிருந்த திருவாளர்கள்: ஜோதி ராமலிங்கம் (தி இந்து புகைப்படக் கலைஞர்) சிவா (தினகரன்  புகைப்படக் கலைஞர்) பிரதாப் (டைம்ஸ் ஆஃப் இந்தியா புகைப்படக் கலைஞர்)  பிரபு (இந்து தமிழ் திசை புகைப்படக் கலைஞர்) ஜெரோம் (விகடன் புகைப்படக் கலைஞர்) அஸ்வின் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர்) விஜி (தினமலர் சி.என்.எஸ் புகைப்படக் கலைஞர் ) *சண்முக சுந்தரம் (தினத்தந்தி புகைப்படக் கலைஞர்) சத்தியசீலன் ( தினமலர்  புகைப்படக் கலைஞர் ) குமரேசன் (நக்கீரன் புகைப்படக் கலைஞர்) முருகேசன்( புதிய தலைமுறை செய்தியாளர்) பிரமோத் (இந்தியா டுடே செய்தியாளர்) சுகுமார் (இந்தியா டுடே ஒளிப்பதிவாளர்) முனாஃப் மற்றும் பாண்டியராஜன் (பாலிமர் செய்தியாளர்கள்) ஹேமந்த் (பாலிமர் ஒளிப்பதிவாளர்) குணசேகரன் (நமது அம்மா செய்தியாளர்) பார்த்தசாரதி (பார்த்தா – நியுஸ் நேஷன்  ஒளிப்பதிவாளர் )ஐயப்பன் (புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர்) உள்ளிட்ட பத்திரிகையாளர்களும்  களத்தில் இறங்கி நோயாளிகளை மீட்கும் பணியில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.

Photographer ashwin, the new Indian Express

ஒரு பக்கம் செய்தி சேகரிக்கும் கடமையில் ஈடுபட்டுக் கொண்டே மனித நேயத்துடன் செயல்பட்ட பத்திரிகை, ஊடக உறவுகளின் சேவை பொதுமக்கள் மத்தியில் பத்திரிகை உலகிற்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளது. நோயாளிகளுக்கு மனித நேயத்துடன் உதவிய பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.