ராதிகா ஜுவல்டெக் நிறுவனம் ஒரு வருடத்தில் லட்சாதிபதி ஆக கிடைத்த மிக நல்ல வாய்ப்பு எனலாம். இப்பங்கின் விலையானது கடந்த ஏப்ரல் 26, 2022 அன்று 185.70 ரூபாயாக இருந்தது. இதே ஏப்ரல் 26, 2021 அன்று இப்பங்கின் விலையானது வெறும் 17 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்பங்கானது இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் 992 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் 18.54% லாபம் கொடுத்துள்ளது.
மோடி அரசு அழைக்கும் 3 வெளிநாட்டு நிறுவனங்கள்.. எதற்கு தெரியுமா..?!
ஒரு வருடத்திற்கு முன்பு இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு கிட்டதட்ட 11 லட்சம் ரூபாய்.
இன்றைய பங்கு நிலவரம் என்ன?
இப்பங்கின் விலையானது பி.எஸ்.இ-யில் 4.93% அதிகரித்து, 194.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 195 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 185.70 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 195 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 15.85 ரூபாயாகும்.
பங்கு விகிதம்
கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது 3.89 சதவீதம் 185.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதற்கிடையில் இப்பங்கின் சந்தை மூலதனம் 459 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இப்பங்கினில் 1614 புரோமோட்டார்கள் 36.35 சதவீதம் அல்லது 85.78 லட்சம் பங்குகளை வைத்துள்ளனர். ஆறு புரோமோட்டார்கள் 63.65 சதவீதம் அல்லது 1.50 கோடி பங்குகளை வைத்துள்ளனர். 1453 பொது பங்குதாரர்கள் 13.41 லட்சம் பங்குகளை வைத்துள்ளனர். 5.68 % பங்குதாரர்கள் 2 லட்சம் மூலதனத்துடன் பங்குகளை வைத்துள்ளனர். 23.66 சதவீதத்திற்கும் மேலான தனி முதலீட்டாளர்கள் 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக மூலதனத்துடன் வைத்துள்ளனர்.
லாபம்
காலாண்டு அடிப்படையில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் டிசம்பர் காலாண்டில் 11.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 13.96 கோடி ரூபாயாக இருந்தது. இதே விற்பனை விகிதமானது 92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 87.64 கோடி ரூபாயாக இருந்தது.
போட்டியாளர்கள் நிலவரம்
செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது டிசம்பர் காலாண்டில் லாபம் சற்று குறைந்திருந்தாலும், இப்பங்கின் விலையானது நல்ல ஏற்றம் கண்டுள்ளது. இதே போட்டி நிறுவனமான டைட்டன் பங்கு விலையானது 72.19% அதிகரித்துள்ளது. இதே கல்யான் ஜூவல்லர்ஸ் பங்கு விலையானது 1.02% குறைந்துள்ளது.
என்ன செய்கிறது?
ராதிகா ஜுவல்டெக் லிமிடெட் நிறுவனம் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மற்றும் வைர நகைகள் மற்றும் ஆபரண வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இது அதன் சொந்த உற்பத்தி மற்றும் மூன்றாம் தரப்பினரால் வடிவமைத்து உற்பத்தி செய்கிறது.
Rs.17 to Rs185: Radhika jeweltech stock turned into multibagger in a year
Rs.17 to Rs185: Radhika jeweltech stock turned into multibagger in a year/ரூ.17 டூ ரூ.185.. மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்த ஜுவல்லரி பங்கு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?