றம்புக்கனை துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிசாரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு கேகாலை நீதவான் திருமதி வாசனா நவரட்ன உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் செய்த மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவர் அறிவித்துள்ளார்.
றம்புக்கனை ரயில் நிலையத்திற்கு அருகில் பாதையை இடைமறித்து, கடந்த 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டவர்களை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.