கோல்கட்டா : இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் வரும் 30-ம் தேதி நிகழ்கிறது. இது பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நடப்பதால் நம் நாட்டில் இதை காண முடியாது.
இது குறித்து வானியல் நிபுணர் டெபி பிரசாத் துவாரி கூறியதாவது:
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 30ம் தேதி நிகழ்கிறது. இது இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி மறுநாள் அதிகாலை 4:08 மணி வரை நீடிக்கிறது.இதேபோல, அடுத்த மாதம் 16ல் முழு சந்திரகிரகணம் நிகழ்கிறது. இது இந்திய நேரப்படி காலை 7:02 மணிக்கு துவங்கி, 10:23 மணிக்கு முடிவுக்கு வருகிறது.இந்த இரண்டு கிரகணங்களையும் நம் நாட்டில் காண முடியாது.
அண்டார்டிகா, அட்லான்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லான்டிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை பகுதியாகவும், முழுமையாகவும் பார்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement