கர்நாடக உச்சநீதிமன்றம், ஹிஜாப் விவகாரம் குறித்து மேல் முறையீட்டு மனுக்களை இரண்டு நாட்களுக்கு விசாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுளள்ன.
தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன், இந்த மேல் முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மூத்த வழக்கரிஞர் மீனாக்ஷி அரோரா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தலைமை நீதிபதி ரமணா மேல் முறையீட்டு மனுக்களை இரண்டு நாட்களுக்குள் விசாரிக்க பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில இந்த ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய பள்ளி மாணவிகள் ஆண்டு இறுதி தேர்வை புறக்கணித்த சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.