பங்கு சந்தையில் தற்போதைய காலக்கட்டத்தில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் இருந்தாலும், லாபகரமான பங்குகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆக ஒரு பங்கினை தேர்வு செய்யும் முன் அது சரியான தேர்வு தானா? இதனை வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களே பரிந்துரை செய்தாலும் அதனை ஏன் பரிந்துரை செய்துள்ளார்கள். என்ன காரணம்? என தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்த சில பங்குகளை பற்றி பார்க்கலாம்.
இலக்கு என்ன?
ஒன்று ஹீரோ மோட்டோ கார்ப், இரண்டாவது மஹிந்திரா & மஹிந்திரா, டிவிஎஸ் மோட்டார்ஸ் தான் அந்த பங்குகள்.
இதில் ஹீரோ மோட்டோ கார்ப் இலக்கு விலை – ரூ. 2825 (வாங்கலாம்)
மஹிந்திரா & மஹிந்திரா இலக்கு விலை – ரூ.1065 (வாங்கலாம்)
டிவிஎஸ் மோட்டார்ஸ் இலக்கு விலை – ரூ.778 (வாங்கலாம்)
அசோக் லேலண்ட் இலக்கு விலை – ரூ.96 ( விற்கலாம்)
மாருதி சுசுகி இலக்கு விலை – ரூ.8412 (பங்கினை சேர்க்கலாம்)
மஹிந்திரா & மஹிந்திரா இலக்கு விலை – ரூ.1065 ((வாங்கலாம்)
டிவிஎஸ் மோட்டாஸ் இலக்கு விலை – ரூ.778 (வாங்கலாம்)
டாடா மோட்டார்ஸ் இலக்கு விலை – ரூ.441 (குறைக்கலாம்)
CAGR வளர்ச்சி எதிர்பார்ப்பு
தற்போது கொரோனாவின் பிடியில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கிராமப்புற பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. நாங்கள் FY22 – 24E காலகட்டத்தில் 17 – 18% வரையில் CAGR விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இருசக்கர வாகனம், பயணிகள் வாகனம், வர்த்தக வாகனம் என பலவற்றிலும் இவ்வளர்ச்சியினை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
செலவினம் அதிகரிக்கலாம்
மேலும் தற்போது மின்சார வாகனங்களுக்கான தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது FY25E காலகட்டத்தில் 25 சதவீதமாக அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் செலவினங்களை அதிகரிக்கலாம். இதன் காரணமாக நிறுவனங்களின் மார்ஜின் பாதிக்கப்படலாம். எனினும் தேவை அதிகரித்து வரும் சூழலில், அது பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது.
இப்பங்கின் விலை சரியலாம்
சில பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள இந்த தரகு நிறுவனம் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பங்கினையும், டாடா மோட்டார்ஸ் பங்கினையும் குறையலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது.
மாருதி சுசுகி, ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஈச்சர் மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.
Disclaimer: This recommendations made above are those of individual analysts or broking companies, and not for good returns
HDFC sec recommends some of auto stocks to buy
HDFC sec recommends some of auto stocks to buy/3 லாபகரமான ஆட்டோமொபைல் பங்குகள்.. வாங்கி வைக்கலாம்.. நிபுணர்களின் செம பரிந்துரை!