சாவோ பவ்லோ :
பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் என்பவருக்கு ஒன்பது மனைவிகள். ஒரு மகளும் உள்ளார். இவருடைய வாழ்க்கை பற்றி ஆர்தர் கூறும்போது, எனக்கு பத்து மனைவிகளும் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்பதே எனது கனவு. தொடக்கத்தில், நேர அனுமதி கிடைத்த பின்பு தாம்பத்தியம் நடந்தது என அவர் கூறுகிறார்.
ஒருவர் என் மீது எப்படி அன்பு செலுத்துகிறார் என்பது பற்றியெல்லாம் மனைவிகள் கவலை கொண்டதில்லை. ஆனால், அன்பளிப்பு வழங்கும்போது, பொறாமை தலை தூக்கி விடுகிறது.
ஒரு மனைவிக்கு விலையுயர்ந்த பொருளை பரிசாக கொடுத்து விட்டு மற்றொருவருக்கு ஒரு சிறிய அல்லது விலை குறைந்த பொருளை கொடுத்து விட்டால், அவர்களுக்கு இடையே பொறாமை ஏற்பட்டு விடும் என்று அவர் கூறுகிறார்.
ஆர்தர் நேர பட்டியல் போட்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டது பற்றி கூறும்போது, இதில் நிறைய சிக்கல்கள் எழுந்தன. மகிழ்ச்சிக்காக அல்லாமல், நேரபட்டியலில் உள்ளதே என்பதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறோம் என்றும் சில நேரங்களில் உணர்ந்தேன்.
சில சமயங்களில், மற்றொருவரை நினைத்து கொண்டே மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டி இருந்தது என கூறுகிறார். படுக்கையறையில் ஏற்பட்ட இந்த சிக்கல்களால், விசயங்கள் இயல்பாக நடக்கட்டும் என நேர பட்டியலை ஆர்தர் விட்டு விட்டார். எங்களுடைய தாம்பத்திய வாழ்க்கை உண்மையில் கேளிக்கையும், மகிழ்ச்சியும் மற்றும் தனித்துவம் நிறைந்தது என்று அவர் கூறுகிறார்.
எனினும், இவர்களில் அகத்தா என்பவர் ஆர்தரை விட்டு பிரிய முடிவு செய்து உள்ளார். அவருக்கு மட்டுமே ஆர்தர் வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால், அது அர்த்தமில்லை. அனைவருடனும் சமஅளவில் வாழ வேண்டும் என்று ஆர்தர் கூறியுள்ளார். அகத்தாவின் நோக்கம் தவறானது என ஆர்தரின் பிற மனைவிகள் நினைத்துள்ளனர்.
சாதனைக்காகவே இந்த திருமணத்திற்கு அகத்தா ஒப்பு கொண்டுள்ளார். உண்மையான உணர்வுகளுக்காக அல்ல என்று கூறும் ஆர்தர், எனது ஒரு மனைவியை இழந்து விட்டாலும் அதனை வேறொருவரை கொண்டு நிரப்ப போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாம்….
‘பூஸ்டர்’ தடுப்பூசி போட மக்கள் தயக்கம்: பின்னணி என்ன..?