தஞ்சாவூர் களிமேடு பகுதியில் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வருடம் தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலில் 94 ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.
அப்போது பூதலூர் சாலையில் களிமேடு என்ற பகுதியில் தேர்பவனி வந்து கொண்டிருந்த போது தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதற்கு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அவர்கள் உலகை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர் களிமேடு பகுதியில் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.