தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் செய்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.
தனுஷை பிரிந்த கையோடு கெரியரில் பிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா. இரண்டு இந்தி படங்களை இயக்கவிருக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தனுஷை பிரிந்த பிறகு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து அவரின் பெயரை நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றிவிட்டார்.
தனுஷின் பெயரை நீக்கினாலும் இன்னும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்கிறார் ஐஸ்வர்யா. மேலும் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருக்கும் தனுஷின் புகைப்படங்களையும் அவர் நீக்கவில்லை.
இதனால் தனுஷுடன் ஐஸ்வர்யா மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்புகிறார்கள். மேலும் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்த கென் கருணாஸை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்.
இது தவிர்த்து தனுஷின் நெருங்கிய தோழியான த்ரிஷாவையும் பின்தொடர்கிறார் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தன் தங்கை சவுந்தர்யாவின் கணவரான விசாகனை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஐஸ்வர்யா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
நேத்து ராத்திரி…: ஐஸ்வர்யா வெளியிட்ட ‘ஹேப்பி போட்டோ’