ஆடம்பரமான பாடி வாஷ், நல்ல ஹேர் வாஷ் உடன் ஒரு சூடான இரவு குளியல், பரபரப்பான நாளுக்குப் பிறகு உங்களை அமைதியாக உணர உதவும். இது ஒருவருக்கு வேகமாக தூங்க உதவுகிறது. ஆனால், நீங்கள் உங்கள் தலைமுடியைக் கழுவிய பிறகும் ஈரத்துடன் தூங்குகிறீர்களா?
ஒருவேளை நாம் அதில் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கலாம், ஆனால் தோல் மருத்துவர் ஜுஷ்யா சரின், இது சிறந்த விஷயம் அல்ல என்று கூறுகிறார். உங்கள் தலைமுடியை ஈரமாக வைத்து தூங்குவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? படிக்கவும்.

நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவைக்கும் போது உங்கள் விரல்கள் எப்படி சுருங்குகின்றன என்பதை கவனித்தீர்களா? உங்கள் தலைமுடியிலும் இதேதான் நடக்கும். “உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது, அது பலவீனமான இழைகளை மென்மையாக்குகிறது. எனவே உங்கள் தலையணையைத் திருப்பும் போது முடி உடைந்து விழுவதற்கு வாய்ப்புள்ளது. இது எப்போதாவது நடந்தால் மிகவும் சேதமடையாது.
ஆனால் நீங்கள் வழக்கமாக ஈரமான முடியுடன் தூங்கினால், உங்கள் தலைமுடிக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம்.

சேதம்’ முடி உடைவது மட்டுமல்ல. “ஈரமான முடி என்றால் ஈரமான உச்சந்தலை. இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சிக்கு வழிவகுத்து, வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இது மேலும் முடி சேதத்தை ஏற்படுத்தும்.
கூடுதலாக, நீங்கள் உங்கள் தலைமுடியை டவலில் உலர வைக்காமல், அப்படியே தூங்கச் செல்லும்போது, அது உச்சந்தலையில் வறட்சியை ஏற்படுத்துகிறது. “உச்சந்தலையில் உள்ள வறண்ட சருமம்’ அதிக எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுக்கிறது, இது உங்கள் தலைமுடியை க்ரீஸ் மற்றும் எண்ணெயாக மாற்றும்,” என்று மருத்துவர் சரின் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“